நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த காவல்துறையினருக்கு தென்மண்டல ஐஜி கண்ணன் வெகுவாக பாராட்டி வெகுமதி வழங்கினார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான கொலை வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா(42) என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றி கூறி வந்துள்ளார். இந்நிலையில் மேற்படி குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டதின் பேரில் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேற்படி குற்றவாளி கடந்த 2007 ஆம் ஆண்டு தென்காசியில் நடைபெற்ற (6 கொலைகள்) வழக்கின் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளியை கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜஹான், தலைமை காவலர்கள் இதயத்துல்லா மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.