கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி சர­வணன், மாவட்ட ஆட்­சியர் அதி­ரடி நட­வ­டிக்­கை

தூத்­துக்­குடி மாவட்­டத்தில் கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது குண்டர் சட்­டத்தின் கீழ் எஸ்பி பாலாஜி சர­வணன் பரிந்­து­ரையின் பேரில் மாவட்ட ஆட்­சியர் லட்­சு­மி­பதி அதி­ரடி நடவ­டி­க்கை மேற்­கொண்­டுள்­ளார்.

கடந்த 12.05.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேரகுளம் சோதனைச் சாவடி அருகே வந்த ஒருவரிடம் தகராறு செய்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வம் (43), ஸ்ரீவைகுண்டம் வெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்களான முருகேசன் மகன் அருன் (எ) அருணாச்சலம் (27) மற்றும் இசக்கிமுத்து மகன் கண்ணன் (எ) கருப்பசாமி (30) ஆகியோரை சேரகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் எதிரிகளான செல்வம், அருன் (எ) அருணாச்சலம் மற்றும் கண்ணன் (எ) கருப்பசாமி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளளுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதனை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அதனை பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குற்­ற­வா­ளிகள் மூவ­ரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து உத்­த­ர­விட்­டார். அதன்­படி குற்ற­வா­ளிகள் மூவரும் சிறையில் அடைக்­கப்­பட்­டனர்.

Comments (0)
Add Comment