தமிழகம் முழுவதும் நடந்த கஞ்சா வேட்டை: 336 பேர் கைது: 1,184 கிலோ கஞ்சா பறிமுதல்

தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி போதைப்பொருள் வேட்டையில் கடந்த 15 நாட்களில் 336 பேர் கைது செய்யப்பட்டு 1,184 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 28.08.2023 முதல் 11.09.2023 வரை, மாநிலம் முழுவதும் 13 பெண்கள் உட்பட பெண்கள் உட்பட 336 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ. 1 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம்- மதிப்புள்ள 1,184 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மேலும் 2 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் ஒரு குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் மூலம் 1 மாதம் சிறு தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய்- அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 87 விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும், 94984 10581 என்ற எண்ணில் வாட்ஸ்அப் குறுந்தகவல் மற்றும் புகைப்படம் மூலமாகவும் மற்றும் என்ற spnibcid@gmail.com மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். மேலும் அனைத்து மாவட்டத்திற்கும் பிரத்யேக வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போதைப் பொருள் விற்பனை மற்றும் மது விலக்கு தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

Comments (0)
Add Comment