1000 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்: சாலை விழிப்புணர்வு ஏற்படுத்திய கமிஷனர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக 1000 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி கமிஷனர் சங்கர் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சென்னை செங்குன்றத்தில் ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் செங்குன்றம் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் அணிவித்து சாலை விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வை பச்சைக் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

சுமார் 1000 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு குறித்த கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment