போலி ஆவணம் மூலம் வங்­கியில் கடன்­பெற்று மோசடி: கட்­டு­மான நிறு­வன பங்­கு­தாரர் கைது: சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

போலியான ஆவணம் தயார் செய்து IOB வங்கியில் சமர்ப்பித்து வீட்டு கடன் பெற்று பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் கட்டுமான நிறுவன பங்குதாரரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீ­சார் கைது செய்­தனர்.

சென்னை ஈக்­காட்டுத் தாங்கல் இந்­தியன் ஓவர் சீஸ் வங்­கியின் கிளை மேலாளர் சுகன்யா (35) சென்னை போலீஸ் கமிஷனர் அலு­வ­ல­கத்தில் ஒரு புகார் மனு அளித்­தார். கடந்த 2019ம் ஆண்டு இந்­தியன் ஓவர்சீஸ் வங்­கியில் Sonex Builders உரிமையாளர்கள் காட்டாங்குளத்தூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2 வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்­ளனர். இதனை மறைத்து, கதவு எண்களை மாற்றி, போலியான ஆவணங்கள் தயார் செய்து சிலருடன் கூட்டு சேர்ந்து, வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ. 60 லட்சம் கடன் பெற்றுள்ளனர். அதனை திரும்பி செலுத்தாமல் ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். அதன் பேரில் கடந்த 04.06.2025 அன்று, மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வுப்பிரிவில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் மத்­திய குற்­றப்­பி­ரிவு கூடுதல் கமி­ஷனர் ராதிகா வழிகாட்டுதலின்படி, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை நடத்­தினர். இதில் Sonex Builders Partner-ஆன தேர் விஜயன் (-63) என்பவர் அவரிடம் வீடு வாங்குபவர்களுக்கு போலியான ஆவணங்களை தயார் செய்து கொடுத்து வங்கியில் சமர்ப்பித்து வீட்டு கடன் பெற்றுள்ளார். அந்த கடனை வங்கிக்கு திரும்ப செலுத்தாமல் சுயலாபம் பெறும் நோக்கத்துடன் வங்கி மற்றும் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து சட்டவிரோதமாக ரூ. 73,77,416- பணம் சுயலாபம் அடைந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

அதன் பேரில் Sonex Builders பங்குதாரரான வண்டலூரைச்சேர்ந்த தேர்விஜயன் நேற்று (08.07.2025) காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். எதிரியை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வுப்பிரிவு, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

Comments (0)
Add Comment