கனடாவில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் சுமார் ரூ.1 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த நப.ரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம், கமுதியைச் சேர்ந்தவர் சண்முகம் சென்னையில் தனியார் ஏஜென்சி நடத்தி வரும் நபர் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக தினசரி செய்தி தாளில் அளித்த விளம்பரத்தை பார்த்து தனது மகனுக்கு வேலை வாங்குவதற்காக தொடர்பு கொண்டபோது, அவர்கள் அளித்த பொய்யான வார்த்தைகளை நம்பி வங்கி கணக்கு மூலமாகவும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.14,25,000- பணத்தை பெற்று கொண்டு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் அளித்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் செந்தில்குமாரி ஆலோசனையின் பேரிலும், துணை ஆணையாளர் ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணை .செய்தனர்.
இதில் சென்னை ஈக்காட்டுத்தாங்கைலைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் ஏஜென்சி ஒன்றின் பெயரில் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இது வரை மொத்தம் 23 நபர்களிடம் ரூ. 1 கோடி பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றியது உண்மை என விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்து வந்த சிவராஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சிவராஜ் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்கள் யாரும், இதுபோன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.