முன்னாள் டிஜிபி ஜாங்கிட் டாக்டர் ஜாங்கிட் ஆனார்

தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ஜாங்கிட் சென்னை, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து பிஎச்டி டாக்டர் பட்டம் பெற்றார்.

தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ஜாங்கிட், ஐபிஎஸ்., தூத்துக்குடி ஜாதி கலவரம் அடியோடு ஒழிப்பு, ராஜஸ்தான் பவேரியா கொள்ளையர்கள் கைது, சென்னையில் ஆட்டம் போட்ட ரவுடிகள் என்கவுன்ட்டர் என அதிரடி ஆக்சன்களை காட்டி சமூக விரோதிகளை மிரள வைத்து தமிழக காவல்துறையின் நெஞ்சை நிமிர வைத்த இவரை சாரும். கடந்த 2019ம் ஆண்டு காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஜாங்கிட் அதனையடுத்து டாக்டர் பட்டம் பெறுவதில் முனைப்பு காட்டி வந்தார்.

‘‘காவல்துறையின் செயல்திறனின் அளவு நுட்பங்கள்’’ என்ற தலைப்பில் கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகள் நுணுக்கமாக பணியாற்றி தனது பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்கான கட்டுரையை சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளார். அதனை ஆய்வு செய்த மெட்ராஸ் பல்கலைக்கழகம் கிரிமினாலஜி துறை அதனை அங்கீகரித்து அவருக்கு பிஎச்டி டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இதனை ஜாங்கிட் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

Comments (0)
Add Comment