ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் 14 அன்று இந்தியா முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. அன்றைய தினம் தீவிபத்து மற்றும் மீட்பு பணிகளில் தைரியமாக செயல்பட்டு வீரர்களுக்கு வீர மரணம் அடைந்த அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
1944 ஆண்டு ஏப்ரல் 14 அன்று மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘SS PORT STIKINS” என்ற கப்பல் தீ விபத்திற்குள்ளானது. இக்கப்பலில் தோராயமாக 1,200 டன் வெடிப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக மும்பை தீயணைப்பு துறை வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். கப்பலில் உள்ள வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதில் மும்பை தீயணைப்பு துறை சார்ந்த 66 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் ஏப்ரல் 14 அன்று தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபி சீமாஅகர்வால் தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் வீரமரணம் அடைந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதில் முதல் முறையாக இந்திய ராணுவப் படையின் Lieutenant General Karanbir Singh Brar, கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை தலைமை இயக்குநர்கள், முன்னாள் இயக்குநர்கள், பிற துறை அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.