தனியார் நிறுவனத்தில் டேட்டாபேஸ் விவரங்களை திருடிய பெண் ஊழியர் கைது: * ஆவடி சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை

தான் பணி புரிந்த தனியார் நிறுவனத்தில் டேட்டா பேஸ் விவரங்களை திருடி இன்னொரு நிறுவனத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட பெண்ணை ஆவடி சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொரட்டுரைச் சேர்ந்தவர் பிரவலிக்கா. மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தை கொரட்டூர் TNHB பெரியார் நகரில் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு டெலிகாலர் பணிக்கு ஆள் தேவைப்பட்டதால் அது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். அதனைப் பார்த்த சென்னை, கொரட்டுரைச் சேர்ந்த குணசுந்தரி (49) என்ற பெண் பவர் டெலிகாலிங் வேலையில் சேர்ந்துள்ளார். அந்த நிறுவனத்தில் உள்ள பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் (Customer’s Database) தகவல்களை பராமரித்தலும் நிறுவனத்தில் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி மூலம் லோன் ஏற்பாடு செய்து தரும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குணசுந்தரி தான் பணிபுரிந்து வந்த மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் தனியார் நிறுவனத்தின் டேட்டா பேஸ் தகவல்களை கோடம்பாக்கத்தில் உள்ள மற்றொரு தனியார் லோன் தயார் செய்து வரும் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.

மெர்க்பிலேம்ஸ் நிறுவனத்தின் கஸ்டமர் தகவல்கள் மற்றும் ஆவணங்களை கொடுத்து அதன் மூலம் கடன் தொகைக்கு ஏற்றவாறு பல லட்சங்களில் கமிஷன் தொகையை குணசுந்தரி பெற்று வந்துள்ளார். இதனையறிந்த மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரவலிக்கா ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தார். ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆவடி சைபர்கிரைம் பிரிவு போலீசார் இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் குணசுந்தரி கொரட்டூரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தபடி தான் பணிபுரிந்து வந்த மெர்க்பிலேம்ஸ் நிறுவனத்தின் கஸ்டமர் டேட்டாபேஸ் விவரங்களை திருடி விற்று கையாடல் செய்து பண மோசடி செய்து வந்தது உண்மை என்பது தெரியவந்தது. குணசுந்தரியை கைது செய்த போலீசார் பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

 

Comments (0)
Add Comment