நீட் தேர்வில் தோல்வி: மகன் இறந்ததால் தந்தையும் தற்கொலை

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). பிளஸ்2 முடித்த இவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் சென்று படித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் அவர் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரை பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Comments (0)
Add Comment