கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த முன்னாள் மாணவர் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த முன்னாள் கல்லூரி மாணவரை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் இன்று கைது செய்தனர்.

மாநிலங்களிலிருந்து கஞ்சா எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் தாம்பரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் கண்காணித்து வந்தனர். அப்போது குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டலம் பகுதியில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தண்டலம் மெயின் ரோடு, மேல்மாநகர் சுடுகாடு அருகில் நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர் உபி மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ் மிஷ்ரா (21) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த நபர்  எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவன் என்றும் ஒரிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சில்லறை விற்பனை செய்ய எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

அவருடைய உடைமை பொருட்களை சோதனை செய்ததில் அதில் இருந்து 1.68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4.200 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தாம்பரம் மதுவிலக்குப்பிரிவு காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Comments (0)
Add Comment