சென்னை நகர ஏஎன்­ஐயூ தனிப்­ப­டை­யிடம் சிக்­கிய போதைக் கும்பல்: கூண்­டோடு சிறையில் அடைப்­பு

சென்னை மது­ர­வா­யலில் போதைப்பொருள் வைத்­தி­ருந்த 10 பேரை ஏஎன்­ஐயூ தனிப்­பி­ரிவு போலீசார் கூண்­டோடு கைது செய்­த­னர். அவர்­க­ளிடம் இருந்து எல்எஸ்டி ஸ்டாம்­புகள், மாத்­தி­ரைகள், கஞ்சா மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகி­யவை பறி­முதல் செய்­யப்­பட்­ட­ன.

போதை­­யில்லாத தமி­ழகம் என்ற திட்­டத்தின் கீழ் சென்னை நகரில் போதைப்­பொருள் நட­மாட்­டத்தை அறவே ஒழிக்க போலீஸ் கமிஷனர் அருண், நுண்ணறிவுப்பிரிவு இணைக்க­மிஷனர் தர்­ம­ராஜன் நேரடி மேற்பார்வையில் ஏன்­ஐயூ என்ற சிறப்பு தனிப்­ப­டையை உரு­வாக்­கி­யுள்ளார். சென்னை நகரம் முழு­வதும் இந்த தனிக்­கு­ழு­வினர் தீவி­ர­மாக கண்­காணித்து போதை கும்­பல்­களை கூண்­டோடு வளைத்து வரு­கின்­றனர்.

இதன் தொடர்ச்­சி­யாக சென்னை மது­ர­வாயல் இன்ஸ்­­பெக்டர் தலை­மை­யி­லான தனிக்குழுவினர் நேற்று முன்­தினம் (12.07.2025) மாலை, மதுரவாயல், காமாட்சி நகர் 2வது மெயின் ரோட்டில் கண்காணித்தனர். அப்­போது அங்கு சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் வைத்திருந்த மது­ர­வாயல் வசந்த் (23), கார­னோடை கார்த்திக் (27), ஆகாஷ் (24), முகப்பேர் கிழக்கு கவுதம் (28), சிதம்­பரம் ராஜ்குமார் (27), செங்­குன்றம் தினேஷ்குமார் (24), மது­ர­வாயல் பவேஷ் (21), சூளை­மேடு திவாகர் (27), கீழ்ப்­பாக்கம் ரூபன் (26), அருண் பரிஷித் (27) ஆகிய 10 நபர்களை கூண்­டோடு கைது செய்தனர். அவர்களிடமிருந்து 81 கிராம், எல்­எஸ்டி ஸ்டாம்புகள், போதை மாத்திரைகள், 53 கிராம் OG கஞ்சா, 350 கிராம் கஞ்சா மற்­றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம், ராயல் என்பீல்டு புல்லட் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கை­தா­னவர்­களில் கார்த்திக் மற்றும் ஆகாஷ் மீது ஏற்கனவே ஒரு போதைப்பொருள் வழக்கு உள்ளது. கைது செய்யப்பட்ட 10 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்­தப்­பட்டு புழல் சிறையில் அடைக்­கப்­பட்­ட­னர். போதை கும்பலை கைது செய்த தனிக்­கு­ழு­வி­னரை கமி­ஷனர் அருண் வெகு­வாக பாராட்­டி­னார்.

 

Comments (0)
Add Comment