‘போதையில்லா தமிழகம்’ என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு மற்றும் அமலாக்கப்பிரிவினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், ஐஜி ராதிகா ஆகியோர் மேற்பார்வையில் ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ நடவடிக்கையின் பகுதியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான மாணவர் குழுக்கள் (Anti Drug Clubs) உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் (NSS), தேசிய மாணவர் படை (NCC) மற்றும் இதர மாணவர்கள் இயக்கங்களின் மூலம் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடர்ச்சியாக மேற்கொள்ள சிறப்பு தன்னார்வலர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், காவல்துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கப் பணியகம் மகேஷ் குமார் அகர்வால், ஐஜி ராதிகா உள்ளிட்ட காவல்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும் போதையில்லா தமிழ்நாட்டினை உருவாக்கு வதற்கான முயற்சியில் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன் ஆகிய இருவரும் காணொளிகளை வெளியிட்டுள்ளனர். இதுபோன்று பொதுமக்களும் மற்றும் பிரபலங்களும் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஊடகங்களின் மூலம் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான செய்திகளை தங்களது சமூக ஊடகங்களில் வெளியிடுமாறும் அதை அமலாக்கப் பணியகத்தின் இணைக்குமாறும்
ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இணையதள முகவரி விவரங்கள்
• இன்ஸ்டாகிராம் : enforcementbureautn
X -தளம் : @drugfreetn
• முகநூல் :Drive Against Drugs-DAD