தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி பரவேஷ்குமார் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பி பாலாஜி சரவணன் முன்னிலையில் மாவட்ட காவல்துறை அலுவலக பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி சரக டிஐஜி பரவேஷ்குமார் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி இன்று (30.12.2023) தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு , மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு, மாவட்ட தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாவட்ட தனிவிரல் ரேகை பிரிவு, மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வகம், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, புகைப்பட பிரிவு, மாவட்ட காவல் அலுவலக பண்டக பிரிவு, மாவட்ட ஆயுதப்படை, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துப்பறியும் நாய்ப்படை பிரிவு ஆகியவற்றை டிஐஜி ஆய்வு செய்தார். எஸ்பி பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆய்வு செய்து மேற்படி பிரிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு டிஐஜி ஆய்வு மேற்கொண்டார்.

Comments (0)
Add Comment