தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கொலை வழக்குகளை தீவிரமாகத் துப்பு துலக்கி கண்டறிந்ததிலும், சாதி அடிப்படையிலான பழிவாங்கும் தாக்குதல்களை தடுப்பதிலும் சிறந்த காவல் பணிபுரிந்த போலீசாரை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
அதேபோல, நாலாட்டின்புதூர் கா.நி எல்லையில் கடந்த 09.04.2023 அன்று பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கு குற்ற எண்.66/2023, u/s 302,307,324,341 இ.த.ச, இரண்டான்டுகளாக நிலுவையில் இருந்தது, இவ்வழக்கில் இறந்து போன பெண் மற்றும் இவ்வழக்கின் வாதியான அவரது ஆண் நண்பர் சுயநினைவு இழக்கும் அளவு தாக்கப்பட்டார், பின்னர் 2025 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் வாதியானவர் ஆட்டோ டிரைவர் என்ற அடிப்படையில் ஆட்டோவை இயக்குவதில் ஏற்பட்ட தொழில் போட்டி மற்றும் சொத்துத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடைபெற்றது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது. இவ்வழக்கின் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான கணேசன் உட்பட ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 07.06.2025 அன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த இரு வழக்குகளிலும், காவல் துணை கண்காணிப்பாளர்கள் வி. ஜகநாதன் மற்றும் பி. அசோகன், விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவல் குழுவினர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
இது போன்று, திருநெல்வேலி மாவட்டத்தில், பழிக்குப்பழி கொலை குற்ற முயற்சிகள் காவல்துறையினரின் நுட்பமான புலனாய்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டன. கடந்த 07.06.2025 அன்று, திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்கிட் மாநகர் அருகே மாறுபட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தாக்க திட்டமிட்டிருந்த அழகுராஜ், இலட்சுமணன் மற்றும் சுப்பிரமணி ஆகிய மூன்று நபர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். இதற்கான தகவலை வழங்கிய தனிப்பிரிவு காவலர் பாலகுமார் மற்றும் விரைந்து நடவடிக்கை எடுத்த ஆய்வாளர் சசிகுமார் ஆகியோரது பணி பாராட்டுதலுக்குரியது.
தொடர்ந்து 08.06.2025 அன்று, பொட்டல் முப்பிடாதி அம்மன் அம்மன் கோவில் திருவிழாவில், கடந்த வருடங்களில் நடந்த சாதி அடிப்படையிலான கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கீழநத்தம் மேலுர் பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் மாறுபட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல், உளவுபிரிவின் தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் ஸ்டீபன் ஜி.ஆர். ஜோஸ் தலைமையிலான மாவட்ட சிறப்பு குழு நடவடிக்கையால் தடுக்கப்பட்டது.
அதேபோன்று, 06.06.2025 அன்று அம்பாசமுத்திரம் உட்கோட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில், மாறுபட்ட சமுதாய இளைஞர்களுக்கு இடையிலான முன்பகை சம்பவத்தின் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது நிகழ்த்தப்பட இருந்த தாக்குதலை, முன்கூட்டிய ஆயுத பாதுகாப்பு வழங்கப்பட்டதன் மூலம் காவல்துறையினரால் தடுக்கப்பட்டது. இது தொடர்பாக மாரியப்பன், வெள்ளச்சாமி, சந்துரு @ பரத், கொம்பையா மற்றும் சாரதி @ பொன்ராஜ் ஆகிய ஐந்து நபர்களும் ஆழ்வார்குறிச்சி கா.நி குற்ற எண்.205/2025 வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இத்தகைய சிறப்பான விசாரணை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காவல்துறையின் நுண்ணறிவு எச்சரிக்கை, தொழில்நுட்ப ஆதாரங்களைப் பயன்படுத்துதல், திறன்மிகு செயல்பாடு ஆகியவை அடங்கி கூட்டு முயற்சியானது சமூக நலனுக்கான காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் செயல் திறனை வெளிப்படுத்துகின்றன. இவ்வாராக அற்பணிப்புடன் சிறப்பாக நற்பணியாற்றிய இந்த காவல்துறையினரது மெச்சத்தகு பணியை பாராட்டும் விதமாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படை தலைவர் சங்கர் ஜிவால் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கவுரவித்தார்.