விரல்ரேகை நிபுணருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

அகில இந்திய அளவில் நடந்த போட்டித் தேர்வில் 2வது இடத்தைப் பிடித்த தமிழக விரல் ரேகைப்பிரிவு பெண் எஸ்ஐக்கு டிஜிபி சங்கர்ஜிவால் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டித் தேர்வு- கடந்த 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை டில்லியில் நடந்தது. இந்தத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்ட ஒரு விரல் ரேகைப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் தேவிபிரியா தமிழ்நாடு போலீஸ் சார்பில் கலந்து கொண்டார். 250 மதிப்பெண்களுக்கு 235 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 2வது இடத்தை பிடித்தார். இதை பாராட்டும் விதமாக தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் தேவிபிரியாவை இன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் தேவிப்ரியா திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஜெய்சங்கர் என்பவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment