தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநில அளவிலான “முதலமைச்சர் கோப்பை (CMTrophy) 2024” விளையாட்டுப் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை வென்ற போலீசாரை டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டினார்.
2024 அக்டோபர் 13 முதல் 16 வரை சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை” போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக 10 அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இறகுப்பந்து போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாநில அரசு பணியாளர்கள் கலந்து கொண்டு, மாவட்ட அளவிலான போட்டிகள் நடைப்பெற்றது.
காவல்துறை இறகுப்பந்து குழு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி இவ்விளையாட்டுப் போட்டியில் 09 பதக்கங்களை வென்றனர், ஜானகி பெண்கள் இரட்டையர் பிரிவில் (வெண்கலப்பதக்கம்) வென்றார். ஹேமராஜ் (முதல்நிலை காவலர்) ஆண்கள் இரட்டையர் பிரிவில் (தங்கப்பதக்கம்) வென்றார். கார்த்தி (காவலர்) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் (தங்கப்பதக்கம்) வென்றார். முகமது ஹசிம் (அவில்தார்) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் (வெள்ளிப்பதக்கம்) வென்றார். மோகன்தாஸ் (காவலர்) ஆண்கள் இரட்டையர் பிரிவில் (வெள்ளிப்பதக்கம்) வென்றார். முகமது ஹசிம் மற்றும் சிவசூர்யா (நாயக் ) ஆண்கள் இரட்டையர் பிரிவில் (வெண்கலப்பதக்கம்) வென்றனர்.
‘ராஜலெட்சுமி (பெண் காவலர்) பெண்கள் ஒற்றையர் பிரிவில் (வெண்கலப் பதக்கம்) வென்றார். அமுதா (முதல்நிலை பெண் காவலர்) மற்றும் தேவி (பெண் காவலர்) பெண்கள் இரட்டையர் பிரிவில் (தங்கப்பதக்கம்) வென்றனர். ராஜலெட்சுமி (பெண் காவலர் ) மற்றும் ஆனந்தி (பெண் காவலர்) பெண்கள் இரட்டையர் பிரிவில் (வெள்ளிப்பதக்கம்) வென்றனர்.
இப்போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கப்பட்டது. ஓற்றையர் பிரிவு போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ரூபாய் 1 லட்சமும், வெள்ளி பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ரூபாய் 75,000 மும், வெண்கலம் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூபாய் 50,000மும் இரட்டையர் பிரிவு போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ரூபாய் 75,000மும், வெள்ளி பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ரூபாய் 50,000 மும், வெண்கலம் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூபாய் 25,000 வழங்கப்பட்டது, நடைபெற்ற போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு அணியினர் 03 தங்கம், 03 வெள்ளி 03 வெண்கலம் உட்பட மொத்தம் 09 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். பதக்கம் வென்றவர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் மற்றும் சிறப்பு காவல்துறை இயக்குநர் வினித் தேவ் வான்க்டே ஆகியோர் பாராட்டினார்கள்.