விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.எம்.ஆர் நகரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதிகள் ராஜன் மற்றும் உமா தேவி இருவரும் கடந்த 19.10.2023 ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைத்து எதிரியை தேடி வந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இறந்துபோன ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜனுக்கு தெரிந்த வளவனூரைச் சேர்ந்த
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போளூர் வட்டம் மொடையூர் கிராமத்தில் கடந்த 10.02.2024-ந் தேதி வேளாண்மைக்கூட்டுறவு சங்க கட்டிடத்தில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. ஆய்வாளர் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட குற்றத்தில் அந்த பகுதியில் கூர்க்கா பணி செய்து கொண்டிருந்த நேபாள் நாட்டை சேர்ந்த கரன்பிஸ்ட் (40) மற்றும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொர்புடைய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1) சாகீப்ஷேக் த/பெ அக்பர்ஷேக். 2) முகமது சர்ப்ராஜ் ஷேக் த/பெ டொபுஷேக் மற்றும் 3) அருண்ஷேக் த/பெ லாலுஷேக் ஆகியோர்கள் என தெரியவந்தது. கடந்த 19.02.2024 அன்று மும்பை சென்று பெரும் சவால்களுக்கிடையே குற்றவாளிகளை கைது செய்து போளூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேற்கண்ட வழக்குகளில் திறமையாக செயல்பட்டு துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்த சம்மந்தப்பட்ட மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தனிப்படையினரை தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.