தூத்துக்குடியில் மேலும் 64 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு: எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சமூக நல்லிணக்கம் ஏற்படும் வகையில் ஜாதிய அடையாளங்களை அழிக்கும் பணியில் எஸ்பி பாலாஜி சரவணன் மாபெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அதன் பேரில் இன்று 64 இடங்களில் ஜாதிய அடையாளங்களை பொதுமக்களே தாமாக முன்வந்து அழித்தனர்.

இன்று (13.09.2023) தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுராமலிங்கபுரம் பகுதியில் 7 மின்கம்பங்கள், தெருக் குழாய் 1, நெடுஞ்சாலைத்துறை அடையாள பலகை 1 என 9 இடங்களிலும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநகர் பகுதியில் 20 மின்கம்பங்களிலும்,

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரரெட்டியாபுரம், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் 35 மின்கம்பங்கள் என 64 இடங்களில் அப்பகுதி ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர். இதுவரை மொத்தம் 5,799 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக எஸ்பி பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அந்த பகுதி மக்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment