தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பாலாஜி சரவணன் பதவியேற்ற பிறகு அங்கு பல்வேறு மாற்றங்கள் மற்றும் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் இன்னொரு புதிய முயற்சியாக தூத்துக்குடியில் கருத்து வேறுபாடு, கலவரம் மற்றும் ஈகோவுக்கு வழி வகுக்கும் ஜாதிய அடிப்படை பிரச்சினைகளை வேறோடு களைந்து அதில் ஒரு சுமுக முடிவு காண்பதற்கான வழிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவி கிடக்கும் ஜாதி பூசல்களை களையும் நடவடிக்கைகளில் முதற்கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதன்படி தூத்துக்குடியில் ஜாதிய அடையாளங்களை அழித்து ஜாதி, மதமின்றி பொது மக்களிடையே சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயத்தை வளர்க்கும் வகையில் பணியில் பாலாஜி சரவணன் மும்முரம் காட்டி வருகிறார்.
அதன்படி தூத்துக்குடியில் பதட்டம் நிறைந்த பகுதிகளை உளவுப்பிரிவு மூலம் கண்டறிந்து அங்கு தானே நேரில் சென்று எஸ்பி பாலாஜி சரவணன் பொதுமக்களிடையே உரையாடினார். தூத்துக்குடி முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் “மாற்றத்தை தேடி” (In Search of Change) என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து அனைத்து மக்களும் இனிவரும் காலங்களில் சாதிய வேறுபாடுகள் இல்லாமல் ஊருக்குள் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் செயல்பட்டு, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அமைதியான மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மாற்ற வேண்டும் எனவும், சாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்கள் அனைவருக்கும் எஸ்பி பாலாஜி சரவணனின் உத்தரவு உத்தரவாக இல்லாமல் தாழ்மையான வேண்டுகோளாக சென்றது.
எஸ்பி பாலாஜி சரவணனின் இந்த சபாஷ் நடவடிக்கையால் 24 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து -இதுவரை மொத்தம் 5,735 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு தூத்துக்குடியில் மிகப்பெரிய சாதனை நடந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 13.09.2023 அன்று சாத்தான்குளம் சப்டிவிஷன் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிப்பன்குளம் பகுதியில் உள்ள 21 மின்கம்பங்கள், 2 நீர்தேக்கத் தொட்டி, 1 பேருந்து நிறுத்தம் 1 என 24 இடங்களில் அப்பகுதி ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர். இதுவரை மொத்தம் 5735 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டதற்காக தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.