சென்னை புழல் சிறையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
புழல் மத்தியசிறை -1 (தண்டனை) சிறையில் SIFEL தொண்டு நிறுவனத்தின் கிராமிய விளையாட்டுகள் மாண்புமிகு சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. சிறைவாசிகள் பலரும் அதில் பங்கேற்று மகிழ்ச்சியுடன் விளையாடினர்.
இந்நிகழ்வின் போது R.R.R-( Reformation, Rehabilitation and Reintegration) Coffee Table Book அமைச்சர் எஸ். ரகுபதி வெளியிட்டார். இந்நிகழ்வில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி முன்னிலை வகித்தார், சிறைத்துறை தலைமையிட டி.ஐ.ஜி இரா. கனகராஜ், சென்னை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி ஆ. முருகேசன், சிறை கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், இரா.கிருஷ்ணராஜ், SIFEL தொண்டு நிறுவன நிறுவனர் ஸ்ரீராம்,ரோட்டரி கிளப் சென்னை வடக்கு தலைவர் G. விஜயராகவன் ஆகியோர் மற்றும் சிறைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.