தூத்துக்குடியில் மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டத்தில் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவல்துறையினருக்கு பங்கு ஈவுத் தொகை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம் இன்று (14.12.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் செயலாட்சியர் ஆழ்வார் குமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2022-2023ம் ஆண்டின் இறுதி தணிக்கை அறிக்கை வாசித்து பதிவு செய்தல், நிகர லாபம் பிரிவினை செய்தல், 2024 – 2025ம் ஆகிய ஆண்டுகளுக்கு உத்தேச வரவு செலவுத் திட்டம் அங்கீகாரம் செய்தல், சங்க சிறப்பு துணை விதி திருத்தம் ஏற்படுத்துதல், தலைவர் மற்றும் பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கணக்காளர் மாரிப்பாண்டி வரவேற்புரையும், விபர அறிக்கையை செயலாளர் ரமேஷ் உரையாற்றினர்.  இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவலர் சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை, இனிப்பு மற்றும் நினைவு பரிசு வழங்கினார். இந்த கூட்டத்தில் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை ஏடிஎஸ்பி உன்னிக் கிருஷ்ணன், காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் குமார், ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள் உட்பட அமைச்சுப்பணி அலுவலர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment