சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் “தீண்டாமை ஒழிப்பு” உறுதிமொழி ஏற்றனர்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் இன்று (30.01.2024) காலை 11 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷன் P.K. செந்தில்குமாரி மற்றும் இணைக்கமிஷனர்கள் கயல்விழி (தலைமையிடம்), மகேஷ்குமார் (போக்குவரத்து தெற்கு), தேவராணி (போக்குவரத்து வடக்கு) துணை ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் தியாகிகள் தினத்தை முன்னிட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.