தூத்துக்குடியில் மாற்றத்தைத் தேடி சமூக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி முத்தையாபுரம், குலசேகரன்பட்டினம், நாசரேத், தெர்மல்நகர் மற்றும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

அதன்படி இன்று (06.10.2023) முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அல்லி அரசன் மற்றும் போலீசார் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம். சவேரியார்புரம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடமும், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் போலீசார் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரன்பட்டினம் வடக்கூர் பகுதியில் பொதுமக்களிடமும், நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எபினேசர் மற்றும் போலீசார் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கவாசகபுரம் பகுதியில் பொதுமக்களிடமும் மற்றும் நாசரேத் புனித ஜான்ஸ் பள்ளி மாணவிகளிடமும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தெர்மல் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா தலைமையிலான போலீஸ் சார் தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காதர் மீரான் நகர் பகுதியில் பொதுமக்களிடமும், செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டான்லி ஜான் மற்றும் போலீசார் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நட்டார்குளம் பகுதியில் பொதுமக்களிடமும் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுவரை மாற்றத்தை தேடி திட்டத்தை வலியுறுத்தி 3,659 விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,15,404 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment