ஜுடோ கிளாஸ்டர் 2023 போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர் பரிசளித்து பாராட்டு

ஆவடி காவல் ஆணையரகத்தில் 63வது தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டல ஜுடோ கிளாஸ்டர் – 2023 போட்டி 16.10.2023 முதல் 18.10.2023 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் ஜுடோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், உஷு, டைக்குவாண்டோ, பென்ஸ்காக் ஸ்லாட் மற்றும் வாள்வீச்சு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சென்னை பெருநகர காவல் துறை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக காவல் துறை மற்றும் தமிழ்நாடு காவல் துறையின் அனைத்து மண்டலங்களை சேர்ந்த அணிகளும், மற்றும் தமிழ்நாடு ஆயுதப்படையின் அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்றன.

தமிழ்நாடு காவல் துறையின் மண்டல அளவிலான இப்போட்டியின் நிறைவு விழா நேற்று 18.10.2023 மாலை 4 அளவில் ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆவடி காவல் இணை ஆணையாளர் டாக்டர். விஜயகுமார், காவல் துணை ஆணையாளர்கள் மத்திய குற்றப்பிரிவு, ஆவடி மற்றும் செங்குன்றம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழகப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தமிழ்நாடு ஆயுதப்படை அணி முதல் இடத்தையும், ஆவடி காவல் ஆணையரக அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன. இவ்வணிகளுக்கு ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் கேடயங்களை வழங்கினார். இவ்விழாவில் காவல் துறை விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.

Comments (0)
Add Comment