சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை புகைப்படக்கலைஞர்களுக்கு தலைக்கவசங்களை வழங்கினார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இணைந்து, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 146 பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு தலைக்கவசங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று (15.11.2023) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு, தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு தலைக்கவசங்களை (Helmets) வழங்கினார். இந்நிகழ்வில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சுதாகர், போக்குவரத்து தெற்கு இணை ஆணையர் மயில்வாகனன், அப்பல்லோ மருத்துவமனை CEO நவீன், Regional Head Public Relations சுகந்தி சுந்தரராஜ், தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட சங்க நிர்வாகிகள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.