சென்னையில் வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு படகில் சென்ற போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.
சென்னை நகரில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் தாக்குதலால் சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போனது. தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்னைப் பெருநகர பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று மாலை எழும்பூர், நரியங்காடு காவலர் குடியிருப்பு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டார்.