புகாரளித்த 84 வயது முதியவர் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமயில் இன்று (04.10.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து 18 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். மேலும், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 25 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமும் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காவல் ஆணையாளர் குறை தீர் முகாமில் சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் மூத்த குடிமகன் M.V. ராஜகோபால் (84) என்பவருக்கு சொந்தமான வளசரவாக்கம், திருப்பூர் குமரன் தெருவில் ரூ. 2 கோடி மதிப்புள்ள 2,400 சதுரடி வீட்டுடன் கூடிய நிலத்தை, M.V. ராஜகோபாலின் 5 மகள்கள் மற்றும் மருமகன்கள் ஏமாற்றி தான செட்டில்மென்ட் பெற்று, தற்போது தன்னை சரிவர கவனிக்கவில்லை எனவும், தான் எழுதிக்கொடுத்து தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையாளரிடம் மனு அளித்தார். அந்த புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும், அந்த முதியவரின் வீட்டிற்கே நேரில் சென்று விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்வின் போது துணை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Comments (0)
Add Comment