பெருகி வரும் சையர் குற்றங்கள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஏப்ரல் 21, 2023 அன்று ஆன்லைன் சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சைபர் கிரைம் விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் குறும்பட போட்டியை சென்னை பெருநகர காவல் மத்திய குற்ற பிரிவு சைபர் கிரைம் செல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி கடந்த 26.01.2024 அன்று சென்னை பெருநகர காவல் மத்திய குற்ற பிரிவு சைபர் கிரைம் சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக திரைப்பட குறும்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு சமீபத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஐந்து சைபர் கிரைம் மோசடி தொடர்பான தலைப்புகளில் மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய “டிஜிட்டல் மோசடி சம்மந்தமான குறும்பட போட்டி” “DIGITAL DECEPTION SHORT FILM” அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பெட்எக்ஸ் மோசடி, ஆன்லைன் பகுதி நேர வேலை வாய்ப்பு மோசடி, சமூக வலைதள மோசடிகள், பங்கு வர்த்தக முதலீடு, கிரிப்டோ கரன்சி மோசடி. ஆன்லைன் தங்க மோசடி, திருமணவலைதள மற்றும் பரிசு மோசடி, ஆன்லைன் லோன் ஆப் மோசடி மேற்படி தலைப்புகளில் 05.02.2024ம் தேதி வரை பலதரப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட 75 குறும்பட வீடியோக்களில் 25 குறும்பட வீடியோக்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டது.
சென்னை லயோலா கல்லூரி விஷூவல் கம்யூனிகேசன், டிஜிட்டல் ஜர்னலிசம் மற்றும் தொழிற் கல்வி துறையைச் சார்ந்த நிபுணர்கள் மற்றும் சைபர் கிரைம் உதவி ஆணையாளர் ஆகியோரின் மேற்பார்வையில் ஒவ்வொரு தலைப்பின் கீழ் இரண்டு வீடியோக்களிலிருந்து முதல் மற்றும் இரண்டாம் இடத்திற்கு 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 1வது மற்றும் 2வது இடத்தைப் பெற்றவர்களுக்கு ரூ.1,00000/- மற்றும் ரூ 50,000/ ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்கள் விபரம்
இன்று (14.03.2024) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பையும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.