சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த 80 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான நட்சத்திர காவல் விருது பெண் காவல் ஆய்வாளருக்கு வழங்கினார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமால், தலைமைக்காவலர் சதீஷ், முதல் நிலைக்காவலர்கள் பிரபாகரன், பாண்டியராஜன், காவலர் ராம்குமார், மைலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர்கள் குமார், லோகநாதன், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் அபிராமி, முதல் நிலைக்காவலர்கள் மாரிக்கண்ணு, பிரசாந்த், கதிரவன் ஆகியோர் சிறந்த பணியாற்றிய பணிக்காக இன்று கமிஷனரிடம் பரிசு பெற்றனர்.
மத்தியகுற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர்கள் புஷ்பராஜ், சிவகுமார், உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், மஞ்சுளா, ராகவி, சிவராஜ், சந்திரசேகர், அருண், எமர்சன் விதலிஸ், தேவராஜ், சம்பத்குமார், திவ்யா, ரமேஷ், சரோஜினி, முதல் நிலைக்காவலர் இஸ்தலிங்கம், தலைமைக்காவலர்கள் விஜயகுமார், சந்திரமோகன், காவலர் செல்வி, புவனேஷ்வரி ஆகியோர் நற்சான்றிதழ் பெற்றனர்.
மேலும் மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் முத்துவேல் பாண்டி, உதவி ஆணையாளர் ராஜசேகரன், ஆய்வாளர்கள் ரேவதி, அப்ரஹாம் குரூஸ், சுமதி, பிரசிதா தீபா, உதவி ஆய்வாளர்கள் லோகேஸ்வரன், கீர்த்தனா, தாமஸ், பாரதி வேலு, கஜேந்திரன், ஸ்ரீதர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தயாளன், சுமதி, அப்துல் அமீது, தலைமைக் காவலர்கள் ஆனந்தன், வெங்கடேஷ்வரி, தெய்வாம்பிகை, கிரேஸ் செல்வராணி, முதல் நிலைக்காவலர் அறிவழகன் ஆகியோர் கமிஷனரிடம் நற்சான்றிதழ் பெற்றனர்.
மேலும் Goondas பிரவில் சிறப்பாக பணிபுரிந்த கண்காணிப்பாளர் ஐயப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் சியாமளா, தலைமைக்காவலர்கள் பிரகாஷ், சரவணன், ரீட்டா, முதல் நிலைக்காவலர்கள் மோகன், தேவந்திரன், பார்வதி, சீதாலட்சுமி, சங்கீதா என 80 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (14.10.2023) நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.
எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கொலை வழக்கு குற்றவாளியை கைது செய்தும், மைலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் டொக்கன்ராஜா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்தும், வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்று தந்தும், ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரித்திரப்பதிவேடு குற்றவாளியை கைது செய்தும், கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை பெற்றுத் தந்தும், பட்டினப்பாக்கம் காவல்நிலைய காவல் குழுவினர் செல்போன் பறிப்பு குற்றவாளியை கைது செய்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.
பட்டினப்பாக்கம் காவல் நிலைய காவல் குழுவினர், பயணி ஆட்டோவில் தவறவிட்ட ஐ-போன கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தும், கோட்டை போக்குரவத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாலாஜா சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்தும், மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், பாதுகாப்பு சென்னை காவல் பிரிவினர் (SCP) புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற குற்றவாளியை கைது செய்தும், செம்பியம் காவல் நிலைய காவல் குழுவினர் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்தும், சூளைமேடு காவல் நிலைய குழுவினர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை பெற்று தந்தும், விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரல் ரேகை மூலம் கைது செய்ய உதவியும், H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஊர்காவல் படை வீரர் செயின் பறிப்பு குற்றவாளியை கைது செய்தும், மத்தியகுற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் வங்கிமோசடி தொடர்பான குற்றவாளிகளை கைது செய்தும், மத்தியகுற்றப்பிரிவு EDF-2 காவல் குழுவினர் EDF வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.
மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த எம்.ஜி.ஆர் அண்ணா நினைவிடம் காவல் நிலைய ஆய்வாளர் ரேணுகாதேவி என்பவருக்கு இன்று (14.10.2023) ஆகஸ்ட் மாதத்திற்கான காவல் நட்சத்திர விருது (Police Star for the month of August-2023) மற்றும் வெகுமதி ரூ. 5,000- வழங்கி பாராட்டினார். இவர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 61,000- அபராதம் பெற்று தந்து சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆர். சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க், (வடக்கு), முனைவர் செந்தில்குமாரி (மத்தியகுற்றப்பிரிவு) காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) கயல்விழி, துணை ஆணையாளர் நிஷா மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.