சென்னை நகர காவல்துறையியில் பணி ஓய்வு பெறுகின்ற 1 கூடுதல் காவல் துணை ஆணையாளர், 1 உதவி ஆணையாளர் உட்பட 30 காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
இன்று (29.02.2024) வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற 30 காவல் அலுவலர்கள், சுமார் 25 ஆண்டுகள் முதல் 39 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கினார்.
கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஓய்வு பெற்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தார். மேலும், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது குறைகள் தெரிவிக்க விரும்பினாலோ தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என காவல் ஆணையாளர் அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அலுவலகர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையாளர் (மத்திய குற்றப்பிரிவு) செந்தில்குமாரி, காவல் இணை ஆணையாளர், (தலைமையிடம்) கயல்விழி, காவல் துணை ஆணையாளர்கள் V.R.சீனிவாசன் (நிர்வாகம்) A.மணிவண்ணன் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அலுவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.