சென்னை நகரில் சிறந்த காவல் பணிபுரிந்த 20 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை புனித தோமையர்மலை காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் மாதவன், சக்ரவர்த்தி, தலைமைக்காவலர்கள் மகேஷ்வரன், முதல் நிலைக்காவலர் சூர்யகுமார், காவலர் கார்த்திகேயன், மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார், முதல் நிலைக்காவலர் குமாரி, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பிகா, முதல் நிலைக்காவலர் நந்தினி, திருவான்மியூர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் அசோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்வேல், முதல் நிலைக்காவலர் விஜயகுமார், டிபி சத்திரம் காவல் நிலைய தலைமைக்காவலர் இளையராஜா, கமலக்கண்ணன், தலைமைக்காவலர் பிரதீப் ஆகியோர் இன்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் சிறந்த காவல் பணிக்காக நற்சான்றிதழ்கள் பெற்றனர்.
புனித தோமையர் மலை உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வீட்டின் பூட்டை டைத்து திருடிய குற்றவாளியை கைது செய்தும், மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைக்க நீதிமன்ற அலுவல் பணிகளை மேற்கொண்டு சிறந்த காவல் பணிபுரிந்துள்ளனர். மேலும் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் தண்டனை கிடைக்க நீதிமன்ற அலுவல் பணிகளை மேற்கொண்டும், திருவான்மியூர் போக்குவரத்து காவல் நிலைய காவல் குழுவினர் தவறவிட்ட செல்போன் மற்றும் ஆவணங்களை உரிமையாளரிடம் ஒப்படைத்தும் சிறந்த காவல் பணி மேற்கொண்டுள்ளனர்,
மேலும் டிபி சத்திரம் காவல் நிலைய காவல் குழுவினர் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்தும், மைலாப்பூர் காவல் நிலைய தலைமைக்காவலர் வழிப்பறி குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் தண்டனை கிடைக்க நீதிமன்ற அலுவல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் K-11 CMBT காவல் நிலைய காவல் குழுவினர் செல்போன் பறிப்பு குற்றவாளியை கைது செய்தும், ராயப்பேட்டை காவல் நிலைய காவல் குழுவினர் கவனத்தை திசை திருப்பி திருடிய குற்றவாளியை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.
இந்த நிகழ்வின் போது கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), கபில்குமார் சரத்கர் (தலைமையிடம்), அஸ்ராகார்க் (வடக்கு) ஆகியோர் இருந்தனர்.