கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில்களை வீச முயன்ற ரவுடியை கைது செய்த 9 போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி நற்சான்றிதழ்

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த 9 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

 

சென்னை பெருநகர காவல், அடையார் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்கள் சங்கர், லட்சுமணப்பெருமாள், கிண்டி காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு தலைமைக்காவலர் மோகன், ரோந்து வாகன ஓட்டுநர்/ ஆயுதப்படை காவலர் சில்வானு, கிண்டி போக்குவரத்து தலைமைக்காவலர் பஞ்சாட்சரமூர்த்தி, ஆயுதப்படை காவலர்கள் அஜித், சுரேஷ்குமார்,

மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் கனகராஜ், ராஜீவ் என 9 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கடந்த 25.10.2023 அன்று கிண்டி, சர்தார் படேல் ரோடு, ராஜ்பவன் பாதுகாப்பு பணியிலிருந்த போது, சுமார் மதியம் 3 மணியளவில், சர்தார் படேல் ரோடு, ராஜ்பவன் நோக்கி பெட்ரோல் நிரப்பபட்ட பாட்டில்களை வீச முயன்ற

வினோத் (எ) கருக்கா வினோத் என்பவரை துணிச்சலாக மடக்கிப்பிடித்து கைது செய்து எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுத்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் (28.10.2023) அன்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிழ்கள் வழங்கி பாராட்டினார்.

Comments (0)
Add Comment