போலீஸ் கமி­­ஷ­ன­ருடன் கடலோர பாது­காப்புப் படை கமாண்டர் சந்­திப்­பு

சென்னை நகர கடலோர பாதுகாப்பு மண்டலம் கமாண்டர் ஐஜி டானி மைக்கேல் (கிழக்கு), ர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணை இன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

கடல் வழியாக போதைப் பொருட்கள் மற்றும் பிற கடத்தல் பொருட்களைக் கடத்துதல், திருவொற்றியூர் மற்றும் நீலாங்கரைக்கு இடையேயான சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளுவதில் ஒருங்கிணைப்பு மற்றும் நுண்ணறிவுத் தகவல்களைப் பகிர்வதில் ஒருங்கிணைப்பு போன்ற பல்வேறு கடலோரப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். மேலும், கடலோரப் பாதுகாப்பு, சட்டவிரோதப் பொருட்களை கடத்துதலைத் தடுத்தல் மற்றும் குற்றத் தடுப்பை உறுதி செய்யும் பொருட்டு, கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அடிக்கடி கலந்துரையாடல் செய்வதற்கு ஏதுவாகவும், பாதுகாப்பு ஒருங்கிணைப்பு வழிமுறைகளை வகுப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

Comments (0)
Add Comment