கேளம்­பாக்கம் அரசு சட்­டக்­கல்­லூரி மாணவர்­க­ளுக்­கி­டையே கோஷ்டி மோதல்: 5 மாண­வர்கள் கைது

சென்னை டாக்டர் .அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்­பட்­டது தொடர்­பாக 5 மாண­வர்­களை போலீசார் கைது செய்­த­னர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கேளம்பாக்கம் அருகிலுள்ள புதுப்பாக்கத்தில் சென்னை டாக்டர் .அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படித்து வந்த நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்குமிடையே யார் பெரியவர் என்பது குறித்து அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 16.07.2024 அன்று சிறுசேரி அருகில் ஐந்தாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனுக்கும், நான்காம் ஆண்டு ஒரு மாணவனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக இரண்டு தரப்பிலும் நண்பர்கள் சேர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 18.07.2024 அன்று கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் சுமார் பத்து நபர்களும், நான்காம் ஆண்டு மாணவர்கள் சுமார் பத்து நபர்களும் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரையொருவர் அருகிலிருந்த கம்பு மற்றும் கட்டை போன்ற பொருட்களால் தாக்கிக் கொண்டுள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த பேராசிரியர்கள் மற்றும் கல்­லூரி முதல்வர் ஆகியோர் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தை தடுத்தனர். கலவரத்தில் காயம்பட்ட இரண்டு தரப்பை சோர்ந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கேளம்­பாக்கம் போலீசார் விரைந்து சென்று மாணவர்களுக்கிடையே கலவரம் மீண்டும் தொடரா வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொண்டு சம்பவத்தில் காயம்பட்ட மாணவர்களிடம் புகாரைப் பெற்று வழக்குபதிவு செய்தனர். மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களில் இரண்டு தரப்பையும் சேர்த்து ஐந்து நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Comments (0)
Add Comment