குராய்டன் தமிழ்ச் சங்கத்தின் தலைவாராகவும், நார்பரி பார்க் வார்டு கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்து வந்த அப்பு தாமோதரன் சீனிவாசன் குராய்டன் மாநகர துணை மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் அஇஅதிமுக மகளிர் அணி தென் சென்னை மாவட்ட இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த மறைந்த சரோஜினி சீனிவாசனின் மகனாவார். இவர் புலம்பெயர்ந்த இங்கிலாந்து நாட்டில் தமிழ் மொழி, கலை மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு கொண்டு வருகிறார். அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த உயரிய பதவி தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரமாக நினைத்து தொடர்ந்து சமூக பணியில் ஈடுபட்டு வருகிறார்.