சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற 11 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
காவல் ஆணையாளர் அவர்கள், ஓய்வு பெற்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தார். மேலும், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது குறைகள் தெரிவிக்க விரும்பினாலோ தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என காவல் ஆணையாளர் ஓய்வு பெற்ற காவல் அலுவலகர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர் செந்தில்குமாரி (மத்தியக் குற்றப்பிரிவு) காவல் துணை ஆணையாளர் ராமமூர்த்தி (நுண்ணறிவுப்பிரிவு) மற்றும் ஓய்வு பெற்ற காவல் அலுவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.