விதி மீறலில் ஈடு­பட்ட 816 வாக­னங்கள் மீது வழக்­குப்­ப­திவு: ஆவடி கமி­ஷனர் சங்கர் அதி­ரடி நட­­வ­டிக்­கை

ஆவடி காவல் ஆணை­ய­ரகத்தில் நேற்று இரவு நடத்­திய அதி­ரடி வாகன சோத­னை­யின் போது விதி மீறலில் ஈடு­பட்ட 816 வாக­னங்கள் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­ட­து.

நேற்று 28/04/2024 இரவு ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட இடங்­களில் அதி­ரடி சோதனை நடத்­தப்­பட்­டது. 19 இடங்களில் போக்குவரத்து பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு இணைந்து சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு அதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 42 பேர், அபாயகரமாக வாகனத்தை ஒட்டிய 58 பேர், அதிவேகமாக வாகனத்தை ஒட்டிய 61 பேர், இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணித்த 43 வாகன ஓட்டிகள், Defective number plate உடன் பயணித்த 176 வாகன ஓட்டிகள் உட்பட போக்குவரத்து விதிகளை மீறிய 816 வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிக பட்சமாக SRMC காவல் நிலைய சரகத்தில் 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல்கள் எதிரான கடும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என கமி­­­ஷனர் சங்கர் எச்­ச­ரித்­துள்ளார்.

Comments (0)
Add Comment