எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை மேடை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் புதிய குத்துச் சண்டை மேடை மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைப்பறை ஆகியவற்றை திறந்து வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

 

சென்னை நகர காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஆளிநர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாநில அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்களை பெறுகின்றனர்.

அதனால் அவர்களை ஊக்குவித்து பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் புதிதாக குத்துச்சண்டை மைதானம் அமைக்க தமிழக அரசு ரூ. 11 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை மேடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைப்பறையை திறந்து வைத்தார்.

மேலும், தடகளம், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கையெறிபந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம், கோகோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) கயல்விழி, துணை ஆணையாளர்கள் ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை), கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment