பெங்கல் புயல் கரையைக் கடப்பதையொட்டி நாளை சென்னை நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அதி கனமழை பெய்யும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையொட்டி சென்னை நகரில் காவல்துறையினர் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் மீட்புப் பணிக்கு தயாராகி உள்ளனர்.
பெங்கல் புயலை எதிர் கொள்ளும் வகையில் அதற்குறிய மீட்பு உபகரணங்களுடன் சென்னை நகரில் உள்ள காவல் மீட்புப் படையினர் அதிகம் சேதம் ஏற்படும் இடங்களில் இப்போதில் இருந்தே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தென்சென்னையில் வெள்ளம் சூழும் பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மீட்பு
பணிகளை தென்சென்னை கூடுதல் கமிஷனர் டாக்டர் என். கண்ணன், இணைக்கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வடசென்னை கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் இணைக்கமிஷனர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் நொளம்பூர், மாதவரம், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் இன்று நேரில் மீட்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.