வங்கியில் ரூ. 11 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 2 வங்கி மேலாளர்கள் உள்பட 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கே.சி.போஸ் என்பவர் குன்றத்தூர் தாலுகா ஆதனூர் கிராம பஞ்சாயத்திற்கு பொதுமக்கள் உபயோகத்திற்காக 1988 –- 1990 காலகட்டத்தில் தானமாக வழங்கப்பட்ட இடத்தினை, போலியான DTCP Apporval தயார் செய்து அதனை பொதுத்துறை வங்கிகளில் அடமானம் வைத்துள்ளார். அதன் மூலம் கடன் பெற்று மோசடி செய்த வழக்குகளில் கடந்த 01.08.2023 அன்று மாலா, பாலசுப்பிரமணியன், விக்னேஷ், முத்துசெல்வன், சிவரஞ்சனி, சங்கரேஸ்வரி, சீனிவாசன், சிவராஜ் ஆகிய 8 பேர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர். இந்நிலையில் இந்த வழக்குகளில் மூளையாக செயல்பட்ட தலைமறைவாக இருந்த சென்னை போரூரைச் சேர்ந்த குமார் @ சுமந்த் குமார், 45 என்பவரை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு தனிப்படை போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து கடந்த 03.08.2023 அன்று கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. வங்கியில் கடன் பெற்று ஏமாற்றும் நோக்கில் குன்றத்தூர் தாலுகா ஆதனூர் கிராம பஞ்சாயத்திற்கு பொதுமக்கள் உபயோகத்திற்காக தானமாக வழங்கப்பட்ட இடத்தினை அதன் லேஅவுட் உரிமையாளர் கே.சி போஸ் என்பவரிடம் இருந்து போலியான DTCP Approval தயார் செய்துள்ளனர். மேலும் பொது அதிகார முகவர்கள் மூலம் வாங்குவது போல் அந்த நிலத்தை காண்பித்து அவற்றை பொதுத்துறை வங்கி மேலாளர்கள் துத்துபள்ளி ரவிந்தரா, 51, ராஜா ரஞ்சித் குமார், 42, ஆகியோர் உதவியுடன் அந்த ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து ரூ. 11 கோடி தொழில் கடன்களை குமார் பல நபர்களுக்கு பெற்று தந்துள்ளது தெரியவந்தது. அதன் பேரில் பொதுத்துறை வங்கி மேலாளர்கள துத்துபள்ளிரவிந்தரா, மற்றும் ராஜா ரஞ்சித் குமார் ஆகியோர் நேற்று (04.08.2023) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று (04.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் மோசடி கும்பலை விரைவாக கைது செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு அணியினரை காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.