சென்னை நகர காவல்­து­றையின் புதிய கமி­ஷ­ன­ராக பொறுப்­பேற்றார் அருண்

சென்னை நகர காவல்­து­றையின் புதிய போலீஸ் கமி­ஷ­ன­ராக அருண் பொறுப்­­பேற்றுக் கொண்­டார்.

கமி­ஷ­ன­ராக இருந்த சந்தீப்ராய் ரத்­தோர் இன்று 08.07.2024 மதியம் மாற்­றப்­பட்டு தமி­ழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் சென்னை நகர போலீஸ் கமிஷ­ன­ராக நிய­மிக்­கப்­பட்டு தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டது. அத­னை­ய­டு­த்து அருண் வேப்­பே­ரியில் உள்ள போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் சென்னை நகர போலீஸ் கமி­ஷ­னராக பொறுப்­பேற்றுக் கொண்டார்.

1998ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதி­கா­­ரி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அருண் 2 ஆண்­டுகள் பயிற்­சிக்குப் பிறகு 2000ம் ஆண்டு நாங்­கு­நேரி, தூத்­துக்­கு­டி ஏஎஸ்­பி­யாக பணியைத் தொடங்­கினார். பின்பு எஸ்பி­யாக பதவி உயர்ந்து 2002ம் ஆண்டு கன்­னி­யா­கு­மரி மற்றும் ­கரூர் எஸ்­­பி­யாக பணியாற்­றினார். மேலும் சென்னை அண்­ணா­நகர், பர­ங்கி­மலை மற்­று­ம் சிபி­சி­ஐடி எஸ்பி, திருப்பூர், போதைப்­பொருள் தடுப்­புப்­பி­ரி­வு­களில் எஸ்­பி­யா­கவும் பணி­யாற்­றினார்.

பின்னர் 2012ம் ஆண்டு டிஐ­ஜி­யாக பதவி உயர்ந்து டிஜிபி அலு­வ­லக தலை­மை­யிடம், சென்னை நகர சட்டம் ஒழுங்கு இணைக்­க­மி­ஷ­னர், போக்­கு­வ­ரத்து, திரு­ச்சி சரக டிஐ­ஜி­யா­கவும் பணி­பு­ரிந்தார். 2016ஆம் ஆண்டு ஐஜி­யாக பதவி உயர்ந்து திருச்சி நகர போலீஸ் கமி­ஷனர், சென்னை நகர போக்­கு­வரத்து போலீஸ் கூடுதல் கமி­ஷனர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் கமி­ஷனர், கமி­ஷனர் அலு­வ­லக நிர்­வா­கப்­பி­ரிவு ஐஜி, திருச்சி மண்­டல ஐஜி மற்­றும் போலீஸ் பயிற்சிக் கல்­லூரி ஐஜி­யா­கவும் பணி­யாற்­றி­னார். பின்னர் 2023ம் ஆண்டு ஏடிஜி­பி­யாக பதவி உயர்வு பெற்று சிவில் சப்ளைஸ் சிஐடி, ஆவடி போலீஸ் கமி­ஷனர் அதன் பிறகு தமி­ழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜி­பி­யாக பணி­பு­ரிந்தார்.

Comments (0)
Add Comment