வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழித்தமைக்காக எஸ்பி மணிவண்ணனுக்கு கேடயம் பரிசு வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழித்ததற்காக இன்று (15.08.2023) 77-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கேடயம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது வேலூர் சரக டிஐஜி டாக்டர் எம்எஸ் முத்துசாமி உடன் இருந்தார்.