அகில இந்­திய காவல் இறகுப் பந்து மற்றும் டேபிள் டென்­னிஸ் போட்டி: ஐஜி ராஜேஷ்­­வ­ரி தங்கம், வெள்ளி, வெங்­க­லப்­ப­தக்­கங்­களை வென்று சாத­னை

கேர­ளா­­வில் காவல்­துறை சார்பில் நடந்த இற­குப்­பந்து, டேபிள் டென்னிஸ் போட்­டி­களில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெங்­க­­லப்­ப­தக்­கங்­களை வென்று தமி­ழக காவல்­துறை ராஜேஷ்­வரி சாதனை படைத்­துள்ளார்.

கேரளா மாநில காவல்துறை சார்பில் 1-வது அகில இந்திய காவல் இறகுப்பந்து குழு சாம்பியன்ஷிப் போட்டிகள் 2024-–25 கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள Regional Sports Centre, Rajiv Gandhi Indoor Stadium, Kadavanthra- இம்மாதம் 11.04.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற்றது.

இதில் தமிழக காவல்துறை சார்பில் 5 ஐபிஎஸ் அதி­கா­ரிகள் மற்றும் 32 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆக மொத்தம் 37 நபர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இக்குழுப்போட்டிகளில் மேஜைப் பந்து (Table Tennis) விளையாட்டில் டிஜிபி அலுவ­லக தலை­மை­யிட டிஜிபி வினித்தேவ் வாங்கடே இறகுப் பந்து போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் 1-வெள்ளியும், தமி­ழ்­நாடு சீருடைப் பணி­யாளர் தேர்­வா­ணைய ஐஜி ராஜேஸ்வரி இறகுப் பந்து போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் 1-வெள்ளியும், மேஜை பந்து போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் 1-தங்கம் மற்றும் 1-வெள்ளியும், தனிநபர் போட்டியில் 1- வெண்கலமும் வென்றனர்.

மேலும் மதுரை மாந­கர காவல் ஆய்­வாளர் ஹேமமாலா இறகுப் பந்து போட்டியில் தனிநபர் பிரிவில் 1-தங்கம், இரட்டையர் பிரிவில் 1-வெள்ளி மற்றும் 1-வெண்கலமும், எஸ்­பி­சி­ஐடி இன்ஸ்­பெக்டர் ஜானகி இறகுப் பந்து போட்டி இரட்டையர் பிரிவில் 1-வெள்ளி மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 1- வெண்கலமும், , IS-GCP இன்­­ஸ்­பெக்டர் ராஜேஷ் மேஜைப் பந்து போட்டியில் 2-வெள்ளியும், திரு­ச்சி லஞ்ச ஒழிப்­புப்­பி­ரிவு இன்ஸ்­பெக்டர் வெங்கடேஷ் இறகுபந்து போட்டியில் 1-வெண்கலமும், சார்பு ஆய்வாளர், மதுரை மாவட்டம் ராமசாமி இறகு பந்து போட்டியில் 1- வெள்ளியும், சென்னை சிபி­சி­ஐடி தலைமைக் காவலர் ஷிஜி அவர்கள் மேஜை பந்து போட்டியில் 1-வெள்ளி மற்றும் 1-வெண்கலமும், ஆவடி மாநகர தலை­மைக்­­கா­வலர் மைதிலி மேஜைப் பந்து போட்டியில் 1-வெண்கலமும் ஆக மொத்தம் 2-தங்கம், 6- வெள்ளி மற்றும் 4- வெண்கலப் பதக்கங்களும் பெற்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பதக்கங்­களை வென்ற தலை­மை­யிட டிஜிபி வினித்தேவ் வாங்­கடே, ஐஜி ராஜேஸ்­வரி உள்­ளிட்­டோரை தமி­ழக டிஜிபி சங்­கர்­ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதிகளை வழங்கினார்.

Comments (0)
Add Comment