தமிழகம் முழுவதும் நேற்று இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்து உட்பட எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்ததால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
31.12.2023 அன்று இரவு முதல் 01.01.2024 காலை வரை தமிழ்நாடு முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், சாலை விபத்துக்கள் மற்றும் இதர அசம்பாவிதங்களை தடுக்கவும் தமிழ்நாடு காவல் துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் மாநிலம் முழுவதும் அமைதியான புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இந்த புத்தாண்டு பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கும் டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அனைத்து காவலர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் மற்றும் அனைத்து பொது மக்களுக்கும் டிஜிபி சங்கர்ஜிவால் தனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.