பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளியை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அது தொடர்பாக இணைக்கமிஷனர் மூர்த்தி மேற்பார்வையில் பிடிவாரண்டு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தாம்பரம் காவல் ஆணையரக, மறைமலை நகர் காவல் நிலைய, கொலை வழக்கில் குற்றவாளி ரஞ்சித்குமார் (44) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் பீர்க்கன்கரணை காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளர் நெடுமாறன் தலைமையிலான தனிப்படையினர் ரஞ்சித்தை நேற்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.