கொரட்டூர் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆவடி கமிஷனர் சங்கர்

 

சென்னை கொரட்டூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு கமிஷனர் சங்கர் நிவாரணம் வழங்கினார்.

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பேரிடர் மீட்புப் படையினர் கடந்த 3 நாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய்பேட்டை தொழுவூரில் மின்சாரம் வழங்கப்படாததால் பொதுமக்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், துணைக்கமிஷனர் அய்மன் ஜமால் ஆகியோர் நேரில் சென்று பொதுமக்களிடம் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று மழை வெள்ளம் வடியாத பகுதியான கொரட்டூர் காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை கமிஷனர் சங்கர் ஆய்வு செய்தார்.

மழை நீரை அகற்றுவதற்காக உரிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

 

Comments (0)
Add Comment