போக்குவரத்து நெரிசலை சரி செய்த ஆவடி கமிஷனர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள், பல்வேறு சமூக அமைப்பினர்கள், சங்கத்தினர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் கலந்துக்கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் அம்பத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் முதன்மை பிரச்சனையாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை கருத்தில் கொண்டு ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின்படி போக்குவரத்து துணை ஆணையாளர் ஜெயலட்சுமி தலைமையில் போக்குவரத்து காவலர்கள் அம்பத்தூர் பகுதியில் உள்ள முக்கியப் பகுதிகளில் குறிப்பாக அம்பத்தூர் OT Bus Stand, மார்கெட் மற்றும் இரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், வாகன நிறுத்தங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களையும் சீர் செய்து, பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்பணிகளை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் இன்று (18.10.2023) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

Comments (0)
Add Comment