தமிழகம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 நாட்களில் குட்காவை கடத்தி விற்ற 961 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் போதையில்லா தமிழகம் என்ற தலைப்பின் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகாமையில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் மற்றும் கூல் லிப் (Cool Lip) ஆகியவை விற்பனை தொடர்பாக வாராந்திர சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் 960 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 971 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப் பட்டவர்களிடம் இருந்து 962 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் மற்றும் 118 கிலோ கூல் லிப் (Cool Lip) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகாமையில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பணை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.