செங்குன்றம் டீக்கடையில் 75 கிலோ குட்கா பறிமுதல்: கடைக்கு சீல்

ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் செங்குன்றம் காவல் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். செங்குன்றம் காவல் ஆய்வாளர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினர் டீக்கடையில் சோதனை நடத்தியதில் குட்கா, கூல் லிப் போன்ற 9 வகையான புகையிலை பொருட்கள் சுமார் 75 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கைப்பற்றப்பட்டது. அதனையடுத்து டீக்கடை உரிமையாளர் ராஜன் (வயது 49) என்பவரை கைது செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் சாந்தி டீ கடை மூடி சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பவர்கள் மீது இது போன்று கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் எச்சரித்துள்ளார்.

Comments (0)
Add Comment